*இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த ‘ஹாட்ஸ்பாட் 2’தயாரிப்பாளர்கள்*

You are currently viewing *இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் பரிசளித்த ‘ஹாட்ஸ்பாட் 2’தயாரிப்பாளர்கள்*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

கே. ஜே. பி டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிப்பில் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட்ஸ்பாட் 2 ‘ திரைப்படம் கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் தேதி  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. சுவாரசியமான கதாபாத்திரங்கள் மற்றும் விறுவிறுப்பான திரைக்கதை மேஜிக்கால் ரசிகர்களின் பேராதரவுடன் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றியைப் பெற்றது. இதனால் மகிழ்ச்சியடைந்த படத்தின் தயாரிப்பாளர்களான சுரேஷ்குமார் – அனில் ரெட்டி – ராபின் ஆகியோர் படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக்கு சொகுசு கார் ஒன்றை பரிசாக வழங்கி வெற்றியை கொண்டாடினர்.

‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் தற்போதும் நூற்றுக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 25 நாட்களைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் பிரைம் டிஜிட்டல் தளத்தில் பிப்ரவரி 20ஆம் தேதி முதல் வெளியாகிறது. 

ஹாட் ஸ்பாட் படத்தின் முதல் பாகம் திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்றதைப்போல்.. டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி பிரம்மாண்டமான வரவேற்பை பெற்றது. இதனால் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த  ஆதரவை பெற்று வெற்றி பெற்றதை போல் இப்படம் எதிர்வரும் 20 ஆம் தேதி முதல் டிஜிட்டல் தளத்திலும் வெளியாகி மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this:

Leave a Reply