*’ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது! திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!*

You are currently viewing *’ஜோ’ திரைப்பட தயாரிப்பாளர்களின் மற்றுமொரு தரமான திரைப்படமான நடிகர் ஏகனின் ‘ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று தொடங்கியது! திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது!*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

வலுவான கதைகளை தேர்ந்தெடுத்து உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் முன்னணி ஓடிடி நிறுவனம் நெட்ஃபிலிக்ஸ். தற்போது நடிகர் ஏகன் நடிக்கும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமைகளை படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். திரையரங்குகளில் படம் வெளியாகும் வரை காத்திருக்காமல் அதற்கு முன்பே டிஜிட்டல் உரிமைகளை நெட்ஃபிலிக்ஸ் வாங்கியிருப்பது கதை மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியிருக்கிறது. 

’ஹைக்கூ’ படப்பிடிப்பு இன்று (பிப்ரவரி 1, 2026) இடுக்கியில் எளிய பூஜை மற்றும் கிளாப்புடன் தொடங்கியது. ’பேரன்பு’, ‘தரமணி’ போன்ற பாராட்டப்பட்ட படங்களின் இயக்குநர் ராம் முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார். படக்குழுவினருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். 

‘ஹைக்கூ’ படத்தை யுவராஜ் சின்னசாமி இயக்குகிறார். விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், டாக்டர் D. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ’ஜோ’ திரைப்படத்தை இயக்கிய ஹரி ஹரன் ராம் இந்தப் படத்திற்கு கூடுதல் திரைக்கதை எழுதுகிறார். 

படப்பிடிப்பு தொடங்கும் முன்னரே நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் டிஜிட்டல் உரிமைகளை வாங்கியிருப்பது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திறமையான நடிகர்களும் அனுபவம் மிக்க தொழில்நுட்பக் குழுவினரும் இணையும் இப்படம்  குறித்தான தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகும்.

*நடிகர்கள்:* ‘ஜோ’, ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ படப்புகழ் ஏகன் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ‘மின்னல் முரளி’, ‘சேஷம் மைக்கேல் பாத்திமா’ படப்புகழ் பெமினா ஜார்ஜ் மற்றும் ’கோர்ட்’ திரைப்படத்தில் நடித்த ஸ்ரீதேவி அப்பல்லா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.  

*தொழில்நுட்பக்குழு விவரம்:*

ஒளிப்பதிவு: பிரியேஷ் குருசாமி, 

எடிட்டர்: சக்தி பிரணேஷ், 

இசையமைப்பாளர்: ‘கோர்ட்’ மற்றும் ’பேபி’ படங்கள் புகழ் விஜய் பல்கானின்.

Share this:

Leave a Reply