*’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் ‘ரீ யூனியன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

You are currently viewing *’மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட அருள்தாஸ் நடிக்கும் ‘ரீ யூனியன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்*

ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் தயாரிப்பில் அருள் தாஸ்- அகில் சந்தோஷ் இணைந்து நடிக்கும் ‘ரீயூனியன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி குணச்சித்திர நடிகரான அருள்தாஸ் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ரீ யூனியன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் சாட்ஸ் ரெக்ஸ் (Satz Rex) இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ரீயூனியன் ‘ திரைப்படத்தில் அருள்தாஸ், ஜெயக்குமார், அனுபமா குமார், அகில் சந்தோஷ், பர்வீன்,சுப்பிரமணியன்,ஜெமினி மணி,சிவம், சேதுபதி ஜெயச்சந்திரன் ,கராத்தே ராஜா,சிலுமிசம் சிவா, குட்டி கோபி ,ஹரிஷ் , அருண் உதயன், சரத் , க்ரிஷ்&அய்ஷூ ,காக்காமுட்டை ரமேஷ், பூவையார், உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்கி மேக் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராக்கி டிஜே இசையமைத்திருக்கிறார். முத்தமிழன் ராமு படத்தொகுப்பு பணிகளை கவனிக்க கலை இயக்கத்தை வெங்கடேஷ் குமார் மேற்கொண்டு இருக்கிறார். கேங்ஸ்டர் பின்னணியில் கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஹஸ்லர்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கார்த்திக் ஜெயாஸ் (Kartik Jayas) தயாரித்திருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கும் நிலையில் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் அருள்தாஸின் தோற்றமும், ஏனைய கதாபாத்திரங்களின் தோற்றமும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடத்தில் ஏற்படுத்தி இருக்கிறது.

Share this:

Leave a Reply