*’சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !*

You are currently viewing *’சிறை’ படத்தின் முதல் சிங்கிள் ‘மன்னிச்சிரு’ பாடல் இன்று வெளியானது !*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ (Seven Screen Studio) சார்பில், தயாரிப்பாளர் SS லலித் குமார் தயாரிப்பில், நடிகர் விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சிறை. இப்படத்தை அறிமுக இயக்குனர் சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ளார். முற்றிலும் மாறுபட்ட களத்தில் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள இப்படம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. மற்றும் இப்படத்தின் சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ், தான் சந்தித்த உண்மையான நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து இந்த கதையை எழுதியுள்ளார். இயக்குநர் வெற்றிமாறனிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தினை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் மன்னிச்சிரு என்று தொடங்கும் பாடல் இன்று வெளியானது. 

இந்தப் படத்தின் பாடல் காட்சிகள் வேலூரில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பாடலில் நாயகன் விக்ரம் பிரபு நாயகி அனந்தாவும் நடித்துள்ளார்கள்.

இந்த படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் அவர்களே  இந்த பாடல் வரிகளையும் எழுதியுள்ளார். 

Share this:

Leave a Reply