பரபரப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!

You are currently viewing பரபரப்பான திரைக்கதையில்.. கலைஞர் டிவியில் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் “ருத்ரா”..!
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 7.30 மணிக்கு ஔிபரப்பாகி வரும் “ருத்ரா” மொகாத் தொடருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் விறுவிறுப்பான கதைக்களத்தில் கதை நகர்ந்து வரும் கதையில் தற்போது, தனது குழந்தை இறந்து விட்டதாக நினைத்து ரஞ்சனி மற்றும் விக்ரம் திதி கொடுக்க, ரஞ்சனியின் மகளின் ஜாதகத்தை பார்த்த ஐயர், அவளது குழந்தை உயிரோடு இருப்பதாக கூறிய நிலையில், கதை சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இறந்துவிட்டதாக நினைத்த தனது மகள் உயிருடன் இருப்பதாக கிடைத்த செய்தி ரஞ்சனிக்கு புத்துணர்ச்சி அளிக்க, தனது மகளை தேடும் பணியில் இறங்குகிறாள். மறுபுறம், இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட வில்லன்கள், இதை வைத்து ரஞ்சனியை ஆட்டிப் படைக்க நினைக்கின்றனர்.

இப்படியான சூழ்ச்சிகளைத் தாண்டி, ரஞ்சனி தனது மகளை கண்டுபிடித்து மீட்பாளா, இதற்கிடையே அவளுக்கு வரும் தடங்கள்களை எப்படி எதிர்கொள்கிறாள் என்பதே விறுவிறுப்பான மீதிக் கதையாகும்.

Share this:

Leave a Reply