*‘பத்தா’  படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!*

You are currently viewing *‘பத்தா’  படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியீடு –ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விஜய் சேதுபதியின் வித்தியாசமான பரிமாணங்கள்!*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்கும், ஸ்டார் ஸ்டுடியோ18 (Star Studio18) , ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் (A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன் (Cine 1 Studios Production) நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் ‘வேர்ல்ட் ஆஃப் பத்தா’ டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

ஒரு சிறுவன் ஓடுவதுடன் தொடங்கும் டீசர், அடுத்தடுத்து பல சுவாரஸ்யமான காட்சிகளுடன் பயணிக்கிறது. ஊரே ‘பத்தா’வைத் தேடும் சூழல் உருவாக, அந்தத் தேடலின் பின்னணி என்ன என்ற கேள்வியை எழுப்பும் வகையில் டீசர் அமைந்துள்ளது. கதை குறித்த முக்கிய தகவல்கள் எதையும் வெளிப்படுத்தாமல், படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

டீசரில் விஜய் சேதுபதியின் பல்வேறு தோற்றங்களும், வித்தியாசமான பரிமாணங்களும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கின்றன. அவரது ஒவ்வொரு தோற்றத்திற்கும் பின்னால் இருக்கும் கதை என்ன என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் காட்சிகள் அமைந்துள்ளதால், ‘பத்தா’ படத்தின் கதைக்களம் குறித்த எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

80s-களின் காலகட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காட்சியமைப்பும் டீசரின் முக்கிய சிறப்பம்சமாக உள்ளது. அந்தக் காலத்தின் தோற்றம், உடைகள், சூழல் மற்றும் சினிமா பாணியை நினைவுபடுத்தும் காட்சிகள் படத்திற்கு தனித்துவமான தோற்றத்தை வழங்குகின்றன. ஏற்கனவே ‘மகளே’ பாடல் மூலம் 80s-களின் இசை உலகை அறிமுகப்படுத்தியிருந்த நிலையில், டீசரும் அதே காலகட்டத்தின் உணர்வை அழுத்தமாக வெளிப்படுத்துகிறது.

இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். ‘மகளே’ முதல் சிங்கிள் மூலம் மென்மையான மெலடி இசையில் வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தியிருந்த சாய் அப்யங்கரின் இசை, தற்போது டீசரிலும் படத்தின் காலகட்டத்திற்கும் காட்சிகளுக்கும் ஏற்ற வகையில் கவனம் ஈர்க்கிறது. 80s-களின் பின்னணியை மையமாகக் கொண்ட இப்படத்தின் இசை உலகமும் படத்தின் முக்கிய அம்சமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமான டீசர் பாணியில் கதையின் மையத்தை வெளிப்படுத்தாமல், கதாபாத்திரங்கள், காட்சிகள் மற்றும் மர்மத்தை மட்டுமே முன்னிறுத்தியுள்ளது ‘பத்தா’ டீசர். விஜய் சேதுபதியின் தோற்றங்கள், 80s-களின் களப்பின்னணி, இசை மற்றும் காட்சியமைப்பு ஆகியவை இணைந்து, படம் முற்றிலும் புதுவிதமான அனுபவமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளன.

விஜய் சேதுபதி, இயக்குநர் பாலாஜி தரணிதரன் மற்றும் சாய் அபயங்கர் உள்ளிட்ட திறமையான கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘பத்தா’, பல்வேறு ஆச்சரியங்களை உள்ளடக்கிய படைப்பாக உருவாகியுள்ளது. முதல் சிங்கிளைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டீசரும் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், ‘பத்தா’ திரைப்படம் வரும் அக்டோபர் 1ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this:

Leave a Reply