உபாஸ்தி கேட் கஃபே & லவுஞ்ச் – தென்னிந்தியாவின் முதல் மீட்கப்பட்ட பூனைகளுக்கான கஃபே

You are currently viewing உபாஸ்தி கேட் கஃபே & லவுஞ்ச் – தென்னிந்தியாவின் முதல் மீட்கப்பட்ட பூனைகளுக்கான கஃபே

சென்னை BESANT NAGAR அமைந்துள்ள உபாஸ்தி கேட் கஃபே & லவுஞ்ச், மீட்கப்பட்ட பூனைகளுக்கு பாதுகாப்பான, அன்பான இல்லச் சூழலை உருவாக்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டுள்ள ஒரு தனித்துவமான முயற்சியாகும்.

“மீட்கப்பட்ட பூனைகளுக்கான ஒரு வீடு” என்ற நோக்கத்துடன் செயல்படும் உபாஸ்தி கேட் கஃபே & லவுஞ்ச், தென்னிந்தியாவில் தனது வகையில் முதல் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

 உபாஸ்தி கேட் கஃபே & லவுஞ்ச் அதன் குழுவினர் 37 பூனைகளுக்கு வெற்றிகரமாக தத்தெடுப்பு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளனர். குறிப்பாக, வயது முதிர்ந்த பூனைகள் மற்றும் பொதுவாக தத்தெடுப்பவர்களின் முதல் தேர்வாக அமையாத பூனைகளுக்கு புதிய குடும்பங்களை கண்டுபிடிப்பதில் இந்த முயற்சி முக்கிய பங்காற்றியுள்ளது.

பூனைகளை வெறும் செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல், குடும்பத்தின் ஒரு அங்கமாகக் கருதி அன்பும் பாதுகாப்பும் நிறைந்த சூழலை உருவாக்குவதே உபாஸ்தியின் நோக்கமாகும்.

இந்த சிறப்பு தொடக்க நிகழ்வில்,

டாக்டர் ராதாகிருஷ்ணன், IAS
முதன்மை விருந்தினர்

கயுஸ்ரீ
நடிகை & சிறப்பு விருந்தினர்

ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பிக்கின்றனர்.

மேலும், உபாஸ்தியின் நிறுவனர் டாக்டர் தஸ்மியா பாப்பா மற்றும் டாக்டர் சாமா அக்பர் ஆகியோர் முன்னெடுத்து வரும் இந்த முயற்சி, மீட்கப்பட்ட பூனைகளின் நலன், பொறுப்பான செல்லப்பிராணி வளர்ப்பு மற்றும் தத்தெடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Share this:

Leave a Reply