எதார்த்த வாழ்வியலோடு பிணைந்த காமெடி அரசியல் களத்தில் கௌதம் ராம் கார்த்திக்..!

You are currently viewing எதார்த்த வாழ்வியலோடு பிணைந்த காமெடி அரசியல் களத்தில் கௌதம் ராம் கார்த்திக்..!
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

எதார்த்த வாழ்வியலோடு பிணைந்த காமெடி அரசியல் களத்தில் கௌதம் ராம் கார்த்திக்..!

தயாரிப்பாளராக அறிமுகமாகும் இயக்குனர் கணேஷ் K பாபு;

Draft by GKB தனது முதல் தயாரிப்பான Production No.1–ஐ அதிகாரபூர்வமாக அறிவிக்க பெருமைப்படுகிறது. சமகால அரசியலை மையமாக வைத்து உருவாகும் இந்த புதிய படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், மற்றும் சிறந்த நடிகர் பட்டாளம் இணைகின்றது. இன்று நடைபெற்ற பூஜையுடன் படப்பிடிப்பு அதிகாரபூர்வமாகத் தொடங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு இயக்குநர்கள் H. வினோத், ராஜு முருகன் மற்றும் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கே செந்தில்  ஆகியோர் விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்ச்சிக்கு சிறப்பு சேர்த்தனர்.

தயாரிப்பாளராக இயக்குனர் கணேஷ் கே பாபுவின் முதல் படைப்பு இது. இந்த படம், தயாரிப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி இருக்கும் கணேஷ் கே பாபு அவர்களின் முக்கிய தருணமாகும்.

‘டாடா’ வெற்றிப் படத்தின் மூலம் அதிகம் அறியப்பட்ட அவர், தற்போது தான் இயக்கும் அடுத்த படமான *‘கராத்தே பாபு’*வில் பிஸியாக பணிபுரிந்து வருகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முதல் பின்னணி பணிகள் வரை வேகமாக நடைபெற்று வருகின்றன. அதைத் தொடர்ந்து  தயாரிப்பாளர் எனும் இந்த முயற்சியின் மூலம், அவர் தனது படைப்புத் துறையை விரிவாக்கி, வலுவான கதைகள் மற்றும் புதிய படைப்பாளர்களை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே பாபு கூறியதாவது,

படத்தின் நாயகன் கௌதம் ராம் கார்த்திக் குறித்து மிகுந்த பாராட்டுகளை தெரிவித்தார்.

கௌதம் ராம் கார்த்திக் தனது கரியரில் ஒரு வலுவான நிலைக்கு வந்துள்ளார். சாமானியனின் அரசியல் வாழ்வை  காமெடி கலந்து எடுத்துரைக்கும் இந்த படத்துக்குத் தேவையான ஆழமும் திறனும் அவரிடம் உள்ளது. சுவாரஸ்யத்தையும் எதார்த்தத்தையும் நகைச்சுவையையும் சமநிலைப்படுத்தும் அவரின் திறமை இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமாக இருக்கும் என்றார்.

மேலும், கௌதம் ராம் கார்த்திக்கை பார்வையாளர்கள் நீண்டநாள் நினைவில் நிறுத்திக் கொள்ளக்கூடிய முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.

இந்தப் படத்தில் செல்வராகவன் சார் இதுவரை காணப்படாத, புதிய பரிமாணம் கொண்ட கதாபாத்திரத்தில் தோன்றி, பார்வையாளர் அனைவரின் கவனத்தையும் நிச்சயம் இருப்பார்.

இப்படத்தின் மூலம் இயக்குனராக தினா ராகவன் அறிமுகமாகிறார்.

இயக்குனர் ராஜு முருகனின் உதவியாளராக பணியாற்றிய தினா ராகவன், தெளிவான பார்வை, மற்றும் புத்துணர்ச்சி மிக்க படைப்பாற்றலை கொண்டவர். இந்த வகை படத்தை உருவாக்குவதற்கு சரியான தேர்வாக அவர் திகழ்கிறார் என்றார்.

நடிகர்கள்,

கௌதம் ராம் கார்த்திக், அஞ்சனா நேத்ரன், செல்வராகவன், ராபி, பி. வாசு, ஏ. வெங்கடேஷ், மாறன், இந்துமதி, ஆதித்யா கதிர், பாக்கியம் சங்கர் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

தொழில்நுட்பக் குழு :

இசை – சாம் சிஎஸ்

வசனம் – ராஜு முருகன்

ஒளிப்பதிவு – பிரதீப் காளிராஜா

கலை இயக்கம் – தா. ராமலிங்கம்

படத்தொகுப்பு  – தீபக் எஸ் 

பாடல்கள் – யுகபாரதி, கணேஷ் கே பாபு, சௌமியா பாரதி D

சண்டை  – அபிஷேக் ஸ்ரீநிவாஸ்

ஆடை வடிவமைப்பு – காயத்ரி பாலசுப்ரமணியன்

எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் – கார்த்திக் துரை

ப்ரொடக்ஷன் எக்ஸிக்யூட்டிவ் – அமிர்தராஜ்

லைன் புரொடியூசர்  – பாலாஜி பாபு S

டிசைன்ஸ் – சாயப்பட்டரை

மக்கள் தொடர்பு – ரேகா

Share this:

Leave a Reply