மங்காத்தா மூவிஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் நட்ராஜ் (நட்டி), சிங்கம்புலி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘கம்பி கட்ன கதை’.
ஒரு ஜாலியான ரோலர் கோஸ்டர் படமாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படம் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் ‘கம்பி கட்டுன கதை’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
விழாவில் நட்ராஜ் பேசியது:
அனைவருக்கும் வணக்கம். தயாரிப்பாளர் ஐயாவிற்கு நன்றி. தயாரிப்பு நிறுவனம் மங்காத்தா மூவீஸ் – இவர்களுக்கு நன்றி.
முதலாம் படம் எடுக்கிறதுன்னால, பட்ஜெட் குறைக்க முயற்சி பண்ணுவாங்க. ஆனா எதுவும் குறையாம பண்றவங்க – அவருதான் இந்த தயாரிப்பாளர். ஒரு சாதாரண விஷயம் தான், கதை இங்கே இருந்தது – ஆனா ஷூட்டிங் ஸ்பாட்டில் தான் படம் உருவானது.
ஆர்ட் டைரக்டர் சிவா, கேமராமேன் ஜெய் அவர்களுக்கு நன்றி. இந்த படத்துக்காக உழைத்த அனைவருக்கும் நன்றி.
முருகானந்தம் சார், சிங்கம் புலி, தயாரிப்பாளர், இயக்குனர் கொடுத்த ஆதரவுதான் இந்த படத்தை வெற்றியாக்கியிருக்கு.
ஸ்ரீரஞ்சினி, ஷாலினி – நீங்கள் இருவரும் அருமையாக நடித்தீர்கள். வாழ்த்துகள்! முத்துராமன் சார், மகேஷ் சார், சாம்ஸ் சார், கோதண்டம் சார் – அனைவருக்கும் நன்றி.
இந்த படத்தில் ஸ்கிரிப்ட் என்ன வேண்டும் என்றதோ அதைத்தான் நாங்கள் செய்தோம். அனைத்து டெக்னீஷியன்களுக்கும் நன்றி.
மாஸ் ஆடியோ அவர்களுக்கும், உத்தரா புரொடக்ஷன்ஸ் அவர்களுக்கும் நன்றி. பத்திரிகையாளர், ஊடக நண்பர்களுக்கும் நன்றி.
இந்த படம் தீபாவளிக்கு திரையரங்கில் வெளியாகிறது – கண்டிப்பா வந்து பாருங்க. நன்றி. குறிப்பாக இசையமைப்பாளர் சதீஷ் அவர்களுக்கு நன்றி மற்றும் வாழ்த்துகள் என்றார்.