சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!

You are currently viewing சிவனின் அருளாசியில், காந்தாரா சேப்டர் 1 (Kantara Chapter 1 ) இசை ஆல்பத்திற்காக, தில்ஜித் தோசாஞ் ஒரு  பாடல் பாடியுள்ளார் !!
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

தேசிய விருது பெற்ற நடிகர்-பாடகர் தில்ஜித் தோசாஞ், (Diljit Dosanjh) இயக்குநர்–நடிகர் ரிஷப் ஷெட்டியுடன் காந்தாரா சேப்டர் 1 இசை ஆல்பத்திற்காக கைகோர்த்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் உணர்ச்சிமிகு பதிவொன்றை பகிர்ந்த தில்ஜித், காந்தாரா திரைப்படம் தன்னை எவ்வளவு ஆழமாக பாதித்தது என்பதை நினைவுகூர்ந்து பகிர்ந்துள்ளார் :

“காந்தாரா என்ற அற்புத படைப்பை உருவாக்கிய என் சகோதரர் @rishabshettyofficial க்கு  பெரு வணக்கம். இந்த படத்துடன் எனக்கு ஒரு தனிப்பட்ட தொடர்பு இருக்கிறது, அதை  இப்போது சொல்ல முடியாது. ஆனால் திரையரங்குகளில் வராஹ ரூபம் பாடல் ஒலித்தபோது, பேரானந்தத்தில் கண்ணீர் விட்டேன்.”

மேலும் வரவிருக்கும் ப்ரீக்வல் குறித்து தனது உற்சாகத்தை வெளிப்படுத்திய தில்ஜித்.., இசையமைப்பாளர் B. அஜனீஷ் லோக்நாத்திற்கு (B. Ajaneesh Loknath) நன்றி தெரிவித்தார். “ஒரே நாளில் அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டேன்,” என்று குறிப்பிட்டார்.
தில்ஜித் தோசாஞ் – ரிஷப் ஷெட்டி கூட்டணி, ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிக்கும் காந்தாரா சேப்டர் 1 படத்திற்கு, புதிய இசை பரிமாணத்தை தருமென  எதிர்பார்க்கப்படுகிறது.

காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், வரும் அக்டோபர் 2, 2025 அன்று  உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படவுள்ளது.

Share this:

Leave a Reply