*தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம்  “படையப்பா”  ரிட்டர்ன்ஸ் !!*

You are currently viewing *தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர் படம்  “படையப்பா”  ரிட்டர்ன்ஸ் !!*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் 50 வருட பொன்விழாவை கொண்டாடும் வகையில், அவரது பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி,  அவரது நடிப்பில், இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், 1999 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற “படையப்பா” திரைப்படம் 4K தரத்தில் புத்தம் புது பொலிவுடன்,  மீண்டும் திரைக்கு வருகிறது.

தலைவர் சூப்பர்ஸ்டார்  ரஜினிகாந்த் தற்போது திரைத்துறையில் 50 ஆவது ஆண்டை நிறைவு செய்துள்ளார். இந்தியா மட்டுமல்லாது ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரும் ஸ்டாராக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கொண்டாப்படுகிறார்.  அவரின் பொன் விழா ஆண்டை கொண்டாடும் வகையில் , பிளாக்பஸ்டர் திரைப்படமான “படையப்பா”  படம் மீண்டும் திரையில் வெளியிடப்படவுள்ளது.

1999 ஆண்டில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான “படையப்பா” படத்தில் சூப்பர்ஸ்டாருடன் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இணைந்து நடித்திருந்தார். சௌந்தர்யா, ரம்யா கிருஷ்ணன், செந்தில், மணிவண்ணன், அப்பாஸ்,  என பெரும் நட்சத்திர பட்டாளம் இணைந்து நடித்தனர். அருணாச்சலா சினி கிரியேஷன்ஸ் சார்பில் , கே. சத்திய நாராயணா, எம். வி கிருஷ்ணா ராவ் மற்றும் கே விட்டல் பிரசாத் ஆகியோர் தயாரித்தனர். இணை தயாரிப்பாளராக பி. எல். தேனப்பன் பணியாற்றினார்.

1999 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக வெளியான படையப்பா படம் அன்றைய  காலகட்டத்தில் 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து,  இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற இப்படம் தற்போதைய டெக்னாலஜியில் 4K தரத்தில் டிஜிட்டல் முறையில் மாற்றம் செய்யப்பட்டு, நவீன ஒலி அமைப்புடன்,  புத்தம் புது பொலிவுடன்,  தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12 ஆம் தேதி, உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this:

Leave a Reply