*மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!*

You are currently viewing *மகளிர் உலக கோப்பையின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின், முதன் முறையாக சென்னை சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை தந்த, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் !!*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

இந்திய நாடே போற்றிய மாபெரும் உலகக் கோப்பை வெற்றிக்கு பின், முதன்முறையாக, சென்னை  சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு வருகை புரிந்துள்ள, இந்திய மகளிர் அணி கேப்டன்  ஹர்மன்ப்ரீத் கவுர் (Harmanpreet Kaur) பிரம்மாண்ட பிக்கில் பால் (Pickle Ball) நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

சமீபத்தில் உலகின் பலமான  8 அணிகள் கலந்துகொண்ட உலககோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில், அசத்தலாக விளையாடியதுடன்,  அணியை வழிநடத்தி, இந்தியா மகளிர் அணிக்கு முதல் உலககோப்பையை பெற்றுத் தந்து,  இந்தியாவிற்கே பெருமை சேர்த்தவர் இந்திய மகளிர் அணித் தலைவர் ஹர்மன்ப்ரீத் கவுர்.

இந்தியாவெங்கும் மகளிருக்கு முன்னுதாரண முகமாக மாறியுள்ள  ஹர்மன்ப்ரீத் கவுர், உலகக் கோப்பையின் வெற்றிக்குப் பிறகு, முதன்முறையாக சென்னை வருகை புரிந்துள்ள நிலையில்,  சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்திற்கு சென்று பல்கலைக்கழகத்தின் வேந்தர் Dr. மரியாசீனா ஜான்சன் மற்றும் பல்கலைக்கழகத்தின் தலைவர் Dr. மரி ஜான்சன்  ஆகியோரை சந்தித்து  உரையாடினார்.

தமிழகத்தில் 38 வருடங்களாக கல்விச்சேவையில் புகழ்பெற்று விளங்கும் சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம்,  இந்தியாவிலேயே மிகப்பிரம்மாண்டமான பிக்கில் பால் (Pickle Ball) போட்டியை நடத்துகிறது.  மிக உயர்தர வசதியுடன் தயாரிக்கப்பட்ட  6 உள்விளையாட்டரங்கத்தில், அனைத்து வயதினரும் கலந்து கொள்ளும் வகையில் இப்போட்டிகள் இன்று மதியம்  நடத்தப்படவுள்ளது.

விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் வகையில், இந்த பிரம்மாண்ட நிகழ்வில் ஹர்மன்ப்ரீத் கவுர் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

Share this:

Leave a Reply