ஸ்ரீ லீலா – விராட் நடித்த ” கிஸ் மீ இடியட் ” செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது

You are currently viewing ஸ்ரீ லீலா – விராட் நடித்த ” கிஸ் மீ இடியட் ” செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

செப்டம்பர் 26 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ” கிஸ் மீ இடியட் “

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019 ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் ஓடி வசூல் சாதனை படைத்த ” கிஸ் ” படம் தமிழில் ” கிஸ் மீ இடியட் ” என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது.

கதாநாயகனாக வீராட் நடிக்கிறார். மற்றும் ரோபோ ஷங்கர், நாஞ்சில் விஜயன், அஸ்வதி இவர்களுடன் இன்னும் ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு – ஜெய்சங்கர் ராமலிங்கம்
இசை – பிரகாஷ் நிக்கி
பாடல்கள் – மணிமாறன்

இணை இயக்குனர்களாக எலிசபெத் மற்றும் நாகன் பிள்ளைபணியாற்றி உள்ளனர்.

கன்னடத்தில் இந்த படத்தை இயக்கிய A.P.அர்ஜுன் தமிழிலும் இயக்கியுள்ளார்.

கல்லூரி மாணவியான ஸ்ரீ லீலா கல்லூரியில் சக மாணவிகளுடன் சேட்டை செய்த காரணத்திற்க்காக கல்லூரி முதல்வரால் ஒரு நாள் தண்டனையாக வகுப்பறையிலிருந்து வெளியேற்றப்படுகிறார். அந்த கோபத்தில் கல்லூரியை விட்டு வெளியே வரும் ஸ்ரீ லீலா கல்லூரிக்கு வெளியில் கல்லூரி முதல்வரின் படம்பொரித்த பேனரில் கல்லை எடுத்து வீசுகிறாள். அந்த கல் பேனரில் பட்டு பிரதிபலித்து ரோட்டில் வந்து கொண்டிருக்கும் வீராட் என்பவரின் காரில் படுகிறது . இதனால் அந்த கார் சுவற்றில் மோதி சேதம் அடைகிறது .இந்த சேதத்திற்கு நஷ்டஈடாக வீராட், ஸ்ரீ லீலாவிடம் நான்கு லட்சம் கேட்கிறார். தரவில்லை என்றால் போலீஸில் புகார் அளிப்பேன் என்று சொல்கிறார். இதற்க்கு ஸ்ரீ லீலா தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று மறுக்கிறார். அதற்க்கு வீராட் மாற்று வழி ஒன்றை சொல்கிறார் . என்னவென்றால் ஒரு முத்தம் கொடு அல்லது இரண்டு மாதம் தன்னுடைய உதவியாளராக வேலை செய்ய சொல்கிறார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின் ஸ்ரீ லீலா உதவியாளராக வேலை செய்ய ஒப்புக்கொள்கிறார். இந்த இரண்டு மாத காலகட்டத்திற்குள் ஸ்ரீ லீலா சில நிகழ்வின் மூலம் தனது காதலை வெளிப்படுத்த முற்பட்டு அதனை சொல்ல வரும்பொழுது, வீராட் அவளை வேலையை விட்டு அனுப்புகிறான் . அவளை அனுப்பிய பிறகுதான் அவள் இல்லாமல் தன்னால் வாழ முடியாது என்பதை உணர்கிறான். பின்பு தனது காதலை வெளிப்படுத்த பல முறை முயற்சிக்கிறான் . அது வெற்றி பெற்றதா ? இல்லையா ? என்பது தான் கதை.

செண்டிமெண்ட் கலந்த
இளமை ததும்பும் காதல் கதையாக உருவாகியுள்ள
” கிஸ் மி இடியட் ” செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Share this:

Leave a Reply