புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!

You are currently viewing புத்தாண்டு கொண்டாட்டமாக 2027 ஜனவரி 1-ம் தேதி மீண்டும் திரைக்கு வரும் மாண்புமிகு முதல்வர் விஜய்யின் ‘பைரவா’!
  • Post author:
  • Post published:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

தமிழகத்தின் முதல்வராக இருக்கும் நடிகர் விஜய்யின் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக, அவர் நடிப்பில் 2017-ம் ஆண்டு வெளியான ‘பைரவா’ திரைப்படம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகிறது.

பி நாகிரெட்டியார் அவர்களின் பிரம்மாண்ட நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. வெங்கட்ராம ரெட்டி  மற்றும் பி. பாரதி ரெட்டி தயாரிப்பில், இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘பைரவா’. தற்போது 2027-ம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஜனவரி 1-ம் தேதி இப்படத்தை மிகப்பெரிய அளவில் மீண்டும் திரையரங்குகளில் வெளியிடத் திட்டமிட்டுள்ளது விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம்.

இயக்குநர் பரதன், இதற்கு முன்பாக விக்ரம் நடிப்பில் வெளியான ‘தில்’, ‘தூள்’, விஜய் நடிப்பில் வெளியான ‘கில்லி’, ‘மதுர’ மற்றும் “ வீரம்” உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்கு வசனம் எழுதியவர். மேலும், விஜய்யை வைத்து ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கியிருந்தார். இந்த நிலையில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து அவர் இயக்கிய திரைப்படம் ‘பைரவா’.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். ஜெகபதி பாபு வில்லனாகவும், டேனியல் பாலாஜி, சதீஷ், தம்பி ராமையா, மைம் கோபி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்த இப்படத்தின் ‘பட்டைய கெளப்பு’, ‘நிலாயோ’, ‘பா பா’, ‘வர்லாம் வர்லாம் வா பைரவா’ உள்ளிட்ட பாடல்கள் இன்றளவும் ரசிகர்களின் விருப்பமான பாடல்களாக உள்ளன.

2017-ம் ஆண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 12-ம் தேதி திரைக்கு வந்த ‘பைரவா’, வெளியான ஐந்து முதல் ஆறு நாட்களிலேயே ரூ.100 கோடி வசூலைக் கடந்தது. இதன் மூலம் விஜய்யின் திரைப்பயணத்தில் ரூ.100 கோடி வசூலைக் கடந்த முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக ‘பைரவா’ இடம்பெற்றது.

திரையரங்கு வெளியீட்டுக்குப் பிறகும் இப்படத்தின் மீதான ரசிகர்களின் வரவேற்பு தொடர்ந்து வருகிறது. தொலைக்காட்சிகளில் ‘பைரவா’ ஒளிபரப்பாகும்போதெல்லாம் கிடைக்கும் அதிகப்படியான பார்வையாளர் வரவேற்பும், டிஆர்பி எண்ணிக்கையும் இதற்குச் சான்றாக இருப்பதாகத் தொலைக்காட்சி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் இப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து கொண்டிருக்கும் வரவேற்பு மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

குறிப்பாக, 2017-ல் இப்படம் வெளியானபோது குழந்தைகளாக இருந்த விஜய் ரசிகர்கள், தற்போது வளர்ந்து இளைஞர்களாகியுள்ள நிலையில், தங்களுக்குப் பிடித்தமான ‘பைரவா’ திரைப்படத்தை மீண்டும் பெரிய திரையில் பார்க்கும் வாய்ப்பை இந்த மறுவெளியீடு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அதேபோல், அப்போது திரையரங்குகளில் படத்தைப் பார்க்கத் தவறிய ரசிகர்களுக்கும் இது ஒரு புதிய அனுபவமாக அமையும்.

இப்படத்தினை  SIM Cine International நிறுவனம் தமிழ்நாடு முழுவதும்  திரையரங்குகளில்  வெளியிடுகிறது.

2027 புத்தாண்டின் முதல் நாளை விஜய்யின் ‘பைரவா’ திரைப்படத்துடன் கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர்!

2027 புத்தாண்டு கொண்டாட்டம் விஜய்யின் ‘பைரவா’வுடன் தொடங்குகிறது!

Share this:

Leave a Reply