இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் சிவாஜியின் திருவிளையாடல்

You are currently viewing இம்மாதம் 27ஆம் தேதி திரைக்கு வரும் சிவாஜியின் திருவிளையாடல்
  • Post author:
  • Post published:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

அருட்செல்வர் ஏபி நாகராஜன் இயக்கத்திலும் திரை இசைத் திலகம் கே வி மகாதேவன் இசையிலும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பிலும் 1965 ஆம் ஆண்டில் வெளியான திருவிளையாடல் திரைப்படம் மாபெரும் வெற்றியை குவித்தது

சிவாஜி கணேசன், முத்துராமன், டி எஸ் பாலையா, நாகேஷ், ஏபி நாகராஜன், சாவித்திரி, தேவிகா ஆகியோர் நடித்த இந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த தருமியாக நடித்த நாகேசுக்கும், சிவனாக நடித்த சிவாஜிக்கும் இடையேயான  அந்த உரையாடல் காட்சி இன்று வரை மக்கள் மனதிலே நிற்கின்ற ஒன்று.

61 ஆண்டுகள் கழித்து மீண்டும் திரைக்கு வர இருக்கும் திருவிளையாடல் படத்தினுடைய டிரைவர் வெளியீட்டு விழா நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்த தினமான அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி அன்று சென்னையில் நடைபெற்ற புலிராம்போது அந்த விழாவில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்னுடைய  பேரனும் சிவாஜி ராம்குமாரின் மகனுமான தர்ஷன் , சிவாஜியின் சகோதரர் வி.சி. சண்முகத்தினுடைய மகனான கிரி சண்முகம் உட்பட அவரது குடும்பத்தினரும், நடிகர் ஒய். ஜி. மகேந்திரன், இளவரசு, இயக்குனரும் நடிகருமான சித்ரா லட்சுமணன், கதாசிரியர் மற்றும் இயக்குனர் பூபதி ராஜா, முனைவர் மருது மோகன் ஆகியோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

லண்டனிலும், ஜெர்மனியிலும் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ பால விநாயகர் பிக்சர்ஸ் சார்பாக ஜி லதா வெளியிடுகிறார்

இம்மாதம் மாதம் 27ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது. சிவாஜி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தப் படத்தின் வெளியிட்டை ஒருங்கிணைக்கின்ற பணியை சிவாஜியின் தீவிர ரசிகரான பி வி முரளி செய்து வருகிறார்.

Share this:

Leave a Reply