KALAIGNAR TV – GOWRI SERIALதுர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா – உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் – பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”

You are currently viewing KALAIGNAR TV – GOWRI SERIALதுர்காவின் உயிரை காப்பாற்றிய கனகா – உண்மையை தெரிந்துகொள்ளும் ஆவுடையப்பன் – பரபரப்பான திருப்பங்களுடன் “கௌரி”

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் தெய்வீக மெகாத்தொடர் “கெளரி”. மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வரும் இந்த தொடரில் தற்போது, துர்கா உயிரோடு வந்தது எப்படி? துர்காவுக்கு வைத்தியம் பார்த்தது யார்? என்பது குறித்து ஆவுடையப்பனின் குடும்பத்துக்கு தெரிய வருவதால் தொடர் விறுவிறுப்பாக நகர்கிறது.

வீணாவின் திட்டத்தின் பேரில், துர்காவை காப்பாற்ற உதவிய வைத்தியரை சந்திக்கும் ஆவுடையப்பன் குடும்பத்தினரிடம், துர்கா உயிரோடு வந்தது எப்படி மற்றும் துர்காவுக்கு வைத்தியம் கொடுத்தது கனகா தான் போன்ற உண்மைகளை வைத்தியர் போட்டுடைக்கிறார்.

இவ்வாறாக, ஒரே தோற்றத்தில் இருக்கும் துர்கா – கனகா பற்றிய மர்மங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதால் அடுத்து என்ன நடக்கும்? அடுத்ததாக ஆவுடையப்பன் என்ன திட்டம் தீட்டுவார்? போன்ற மர்மங்களுடனும், துர்கா மற்றும் கனகாவின் அடுத்த நகர்வு என்னவாக இருக்கும்? என்கிற எதிர்பார்ப்போடும் தொடர் விறுவிறுப்பாக நகர்ந்து வருகிறது.

Share this:

Leave a Reply