*Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!*

You are currently viewing *Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment  இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் வித் லவ் ( With Love ) ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டார்!!*
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகி வரும், புதிய படத்திற்கு வித் லவ் ( With Love ) என தலைப்பிடப்பட்டுள்ளது.  

இப்படத்தின் அதிகாரப்பூர்வ ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசரை , தலைவர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

டூரிஸ்ட் ஃபேமிலி படம் மூலம் கவனம் ஈர்த்த அபிஷந்த் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தை  “லவ்வர்,  டூரிஸ்ட் ஃபேமிலி” படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய மதன் இயக்கி உள்ளார்

இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ஷ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். k.சுரேஷ் குமார் எடிட்டிங் பணிகளை செய்கிறார். ராஜ்கமல் கலை இயக்கம் செய்துள்ளார். உடை வடிவமைப்பாளராக ப்ரியா ரவி பணியாற்றியுள்ளார்.

முழுக்க முழுக்க நவீன இக் கால இளைஞர்களை கவரும், அருமையான  காதல் கதையாக உருவாகிவரும் இப்படத்திற்கு, தலைமுறையின் புழக்கத்தில் இருக்கும் “வித் லவ் ( With Love )”  தலைப்பு மிகப்பொருத்தமாக அமைந்துள்ளது.  இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்  டீசர் தற்போது இணையம் முழுக்க பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது.

தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைக்களங்களில், தொடர் வெற்றிப்   படங்களை வழங்கி வரும் MRP Entertainment நிறுவனம், குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக்  வெற்றியைத் தொடர்ந்து, இப்படத்தை தயாரிக்கிறது. Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் இப்படத்தை இணைந்து வழங்குகிறார்

LINK : https://www.youtube.com/watch?v=gNrYsSN0V9A

Share this:

Leave a Reply