கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும்

You are currently viewing கலைஞர் டிவியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு நடிகர் ஆரி தொகுத்து வழங்கும்
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

“வா தமிழா வா”

கலைஞர் தொலைக்காட்சியில் ஞாயிறுதோறும் காலை 10மணிக்கு “வா தமிழா வா” என்கிற பிரம்மாண்ட விவாத நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

மக்களின் குரலாய், மக்கள் நினைப்பதை பேசிட வாய்ப்பு வழங்க மேடை அமைத்து தரும் இந்த நிகழ்ச்சியை தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ஆரி அர்ஜூனன் தொகுத்து வழங்குகிறார்.

சமுதாயத்தில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகள், பொதுமக்களின் பரவலான பேச்சு, நேர்மறை எண்ணங்கள்என மக்களின் பலவிதமான கருத்துகளை வெளிப்படுத்தஉருவாக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும்ஒவ்வொரு புதிய தலைப்புடன் பல்வேறு சூழ்நிலைகளில்நடக்கும் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலையும், மனதிற்கு நெருக்கமான, அன்றாடம் நாம் பார்த்து கடந்துசெல்லும் நிகழ்வுகளை தலைப்புகளாக விவாதிக்க வழிவகுக்கும் இந்த நிகழ்ச்சி, அவற்றில் நிலவும்பிரச்சனைகளைக் களையவும் உதவுகிறது.

Share this:

Leave a Reply