கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட “கற்றது சமையல்”

You are currently viewing கலைஞர் டிவியின் கிராமத்து பின்னணி கொண்ட “கற்றது சமையல்”
  • Post author:
  • Post category:NEWS
  • Post comments:0 Comments

கலைஞர் தொலைக்காட்சியில் திங்கள் – வெள்ளி வரை மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் “கற்றது சமையல்” நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

மண் மனம் மாறாமல் முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் காடு, மேடு என வித்தியாசமான இடங்களை தேர்வு செய்து கிராமத்து சமையலை மிக்ஸி, கிரைண்டர்  போன்ற எந்த வித நவீன உபகரணங்களும் இன்றி, இயற்கையாகவே கிடைக்கும் பொருட்களை வைத்து முழுக்க முழுக்க கிராமத்து பாணியில், கைப்பக்குவத்திலேயே சுவையான மற்றும் ஆரோக்கியமான உணவை சமைப்பதே இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம்.

இதுவரை நாம் அறிந்திராத பல சுவையான பாரம்பரிய உணவு வகைகளை, அதன் இயற்கை மனம் மற்றும் ருசியுடன் சமைப்பதுடன், தினமும் ஒரு வித்தியாசமான சமையலை நம் கண் முன்னே விருந்தளிக்கும் விதமாக “கற்றது சமையல்” நிகழ்ச்சி உருவாகி வருகிறது.

Share this:

Leave a Reply