‘LCU முடிவடையவில்லை!’ – எதிர்மறை விமர்சனங்களுக்கு விளக்கம் அளித்த லோகேஷ் கனகராஜ்

இயக்குநர் – நடிகர் லோகேஷ் கனகராஜ் பத்திரிக்கையாளர் சந்திப்பு! அல்லு அர்ஜுன் படத்தின் பணிகளை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கைதி 2 படத்தின் பணிகளை தொடங்க உள்ளேன்’ என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர இயக்குநரான லோகேஷ் கனகராஜ் – தன்னுடைய எதிர்கால திட்டங்கள் குறித்தும், தற்போது பணியாற்றி வரும் பணிகள் குறித்தும், தன் மீது சமூக வலைதளங்கள் மூலமாக முன்வைக்கப்பட்ட எதிர்மறை விமர்சனங்களுக்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் வகையிலும் சென்னையில் பத்திரிக்கையாளர் – ஊடகவியலாளர்களை சந்தித்தார். அதில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், ” ஒவ்வொரு திரைப்படத்தின் வெளியீட்டிற்கு பிறகு ஊடகங்களை ஏதேனும் ஒரு வகையில் சந்திப்பது என்னுடைய வழக்கம். ‘கூலி’ படத்திற்குப் பிறகு… ஊடகங்களை சந்தித்து பேச வேண்டும் என நினைத்து, தற்போது தான் உங்களை சந்திக்கிறேன். சமூக வலைதளங்களில் என்னைப் பற்றி வெளியாகும் செய்திகளுக்கு என்னுடைய விளக்கத்தை அளிக்க வேண்டும் என்பதற்காகவும் உங்களை சந்திக்கிறேன். ‘கூலி’ திரைப்படம் 35 நாட்கள் திரையரங்குகளில் ஓடி உள்ளது. இதற்காக முதலில் மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். வசூல் பற்றி நான் பேச விரும்பவில்லை. இது லாபகரமான படம் என்று தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் எங்களிடம் தெரிவித்து விட்டது. ஆயிரம் விமர்சனங்களை கடந்து அந்த திரைப்படம் 35 நாட்கள் ஓடியதற்கும்…  வசூலித்ததற்கும்… ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி.‌ சமூக வலைதளங்களில் வெளியான இப்படத்தை பற்றிய விமர்சனம் என்னை யோசிக்க வைத்தது. என்னிடமிருந்து இதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்… இப்படி கதை சொல்வதை தான் விரும்புகிறார்கள்… என பல விசயங்களை நானும் அதிலிருந்து கற்றுக் கொண்டிருக்கிறேன். இதனை என்னுடைய அடுத்தடுத்த படங்களில் இடம்பெறச் செய்து, எதிர்மறை விமர்சனங்கள் அல்லாத படைப்புகளை அளிப்பதற்கு முயற்சி செய்வேன். ‘கூலி’ திரைப்படம் வெளியாகும் நேரத்தில் ரஜினிகாந்த் சாரையும், கமல்ஹாசன் சாரையும் சந்தித்தேன். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க விரும்புகிறோம்’ என்றார்கள். அது எனக்கு மிகப்பெரிய வாய்ப்பு. கிட்டத்தட்ட 46 வருடங்கள் கழித்து இருவரும் ஒன்றிணைந்து நடிக்கிறார்கள் என்றால்… அது மிகப்பெரிய வாய்ப்பு.  அவர்கள் இருவரும் சேர்ந்து நடிக்கும் படத்தை என்னை இயக்கச் சொன்னதே.. எனக்கு பெரிய விசயமாக இருந்தது. அந்த சூழலில் ‘கைதி 2’ என்பதுதான் என்னுடைய திட்டமாக இருந்தது. அதன் பிறகு இதன் தயாரிப்பு நிறுவனத்திடம் இதைப்பற்றி எடுத்துச் சொல்லி.. இது போன்ற வாய்ப்பு மீண்டும் கிடைக்காது என்பதையும் சொல்லி… அந்த படத்தை நிறைவு செய்துவிட்டு வருகிறேன் என்று கேட்டுக் கொண்டேன். அதன் பிறகு ஒன்றரை மாதங்கள் இருவருக்காகவும் சின்சியராக கதை எழுதினேன்.‌ இருவரையும் வைத்து ஒரு படத்தை உருவாக்க நினைத்தேன். அதன் பிறகு அவர்கள் இருவரையும் தனித்தனியாக நேரில் சந்தித்து கதையையும் விவரித்தேன். கதையைக் கேட்டு இருவரும் வியப்படைந்தார்கள். ஆனால் இருவரும் தொடர்ந்து ஆக்சன் படங்களில் தான் நடித்துக் கொண்டே இருந்தனர். தற்போது நடித்து வரும் ‘ஜெயிலர் 2 ‘ மற்றும் அன்பறீவ் இயக்கத்தில் உருவாகும் கமல்ஹாசனின் படம் வரை ஹெவியான ஆக்சன் படங்கள்தான். அதனால் இருவரும் ஆக்ஷன் இல்லாமல் மென்மையான திரைக்கதையாக இருந்தால் நன்றாக இருக்கும் என எண்ணினர்.‌ இதை அவர்கள் இருவரும் என்னிடமும் தெரிவித்தனர். அத்தகைய ஸ்டைலில் எனக்கு படத்தை இயக்கத் தெரியாது. இதை அவர்களிடம் தெரிவித்துவிட்டு விலகி விட்டேன்.‌ நான் எப்போது திரும்பி வருவேன் என்று தெரியாததால், ‘கைதி 2’ படத்திற்கான கால்ஷீட்டை நடிகர் கார்த்தி மற்றொரு இயக்குநருக்கு வழங்கி விட்டார்.‌ இதுதான் நடந்தது. இதற்கிடையில் கிடைத்த நேரத்தில்… ஆறு ஆண்டுகளுக்கு முன் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்குவதற்கு முன் பணம் வாங்கியிருந்தேன். அந்த கமிட்மெண்ட்டை கிளியர் செய்து விடலாம் என்று இருந்தபோது… எனக்கு மூன்று ஆண்டுகளாக அல்லு அர்ஜுனுடன் தொடர்பு இருந்தது. நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றவும் பேச்சு வார்த்தை நடத்தி இருந்தோம். எல்லாம் கூடி வந்ததால்… மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்காக அல்லு அர்ஜுன் நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறேன். இதற்கு இடையில் ஊதியத்தை அதிகமாக கேட்டதால் தான் ‘கைதி 2’ படத்தின் பணிகள் நடைபெறவில்லை என செய்தி வெளியானது. இது முற்றிலும் தவறு. ஒரு இயக்குநருக்கான சம்பளம் என்பது தயாரிப்பாளரும், சந்தையும் தான் தீர்மானிக்கிறது. நான் எவ்வளவு கேட்டாலும் மார்க்கெட்டில் எனக்கு என்ன மதிப்போ.. அதற்கு ஏற்ற வகையில் தான் எனக்கு சம்பளம் தருவார்கள். கடந்த வாரம் ‘கைதி 2 ‘படத்தின் தயாரிப்பாளரையும், மற்றவர்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தி விட்டேன். என்னுடைய அடுத்த திரைப்படம் ‘கைதி 2’ வாகத்தான் இருக்கும். இதற்கிடையில் LCU நிறைவு பெற்றது என செய்திகள் வெளியானது. LCU என நான் பெயர் வைக்கவில்லை. ரசிகர்கள் தான் ஏற்படுத்தினர். நான் அதை பின்தொடர்கிறேன். இதை நான் மட்டும் முடிவு செய்து, இனி LCU வில் படம் வராது என்று சொல்ல முடியாது. ‘கைதி 2’, ‘விக்ரம் 2’, ‘ரோலக்ஸ்’ இதெல்லாம் என்னுடைய கமிட்மெண்ட். இது எல்லாம் உருவாக்காமல் என்னால் போக முடியாது. அதனால் LCU தொடர்கிறது. அல்லு அர்ஜுன் படம் வெளியான பிறகு இவை மீண்டும் திறக்கப்படும்.  எங்களுடைய தயாரிப்பில் உருவாகும் ‘பென்ஸ்’ எனும் படமும்  LCU வை சார்ந்தது தான்.

0 Comments

*நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா நடிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ரணபலி’ படத்தின் கிளிம்ப்ஸ் வெளியீடு! பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இந்தப் படம் செப்டம்பர் 11 அன்று வெளியாகிறது!*

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நடிகர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும், இதுநாள் வரை ‘VD 14’ என அறியப்பட்ட திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு ’ரணபலி’ என இன்று குடியரசு தினத்தை…

0 Comments

தயாரிப்பாளர் ராஜு ஷெரேகர் வழங்கும் ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டைட்டில் இன்று வெளியிடப்பட்டது!

இதுவரை நாம் உணர்ந்திடாத ஆழமான, ஐந்து காதல் கதைகள் ரசிகர்களை மெய்மறக்க செய்ய வருகிறது. உயிரில் இருந்தும், உணர்வில் இருந்தும், சுவாசத்தில் இருந்தும் பிறப்பதுதான் காதல்! அதுதான் ’Vowels’. ‘VOWELS – An Atlas of Love’ திரைப்படம் காதலின் பல…

0 Comments

சின்ன படங்கள் ஓடப் பயம்… ரீ ரிலீஸ் கலாச்சாரம் ஆபத்து!” – ‘ப்ராமிஸ்’ விழாவில் பேரரசு ஆவேசம்

மக்கள் சிறு முதலீட்டுப் படங்களைப் பார்க்கப் பயப்படுகிறார்கள்: 'ப்ராமிஸ்' பட விழாவில் இயக்குநர் பேரரசு பேச்சு!  ரீ ரிலீஸ் படங்களால் நேரடிப் படங்களுக்கு ஆபத்து : இயக்குநர் பேரரசு பேச்சு!  ரீ ரிலீஸ் படங்களுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டும்:…

0 Comments

 ஜெயராம், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி –  நகுல் நடிக்கும் ” காதல் கதை சொல்லவா ” பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகிறது. 

முக்கிய கதாபாத்திரத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கும் "காதல் கதை சொல்லவா" பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியாகும் " காதல் கதை சொல்லவா "  பெப்பர் மின்ட் பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் ஆகாஷ் அமையா ஜெயின் …

0 Comments

கலப்பை மக்கள் இயக்க நிறுவன தலைவரும், திமுக’வில் தன்னை இணைத்துகொண்டு அரசியல் களத்தில் கால் பதித்துள்ளவரும், நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளருமான பி டி செல்வகுமார் அவர்களுக்கு திரையுலகம் சார்பில் கடந்த 23.1.2026 அன்று சென்னை வடபழனி பரணி ஸ்டுடியோவில் பாராட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

திரைப்படத்துறையில் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய காலத்தில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளிவர துணையாக இருந்தவர் என்பதற்காகவும், கலப்பை மக்கள் இயக்கத்தின் மூலமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 25 அரசுப்பள்ளிகளுக்கு கலையரங்கம், வகுப்பறைகள் கட்டித் தந்ததற்காகவும் இந்த பாராட்டு விழாவுக்கு ஏற்பாடாகியிருந்தது. நிகழ்வில் தமிழ்நாடு…

0 Comments

ஜி.வி. பிரகாஷ் குரலில் சிவனின்  மகிமை போற்றும் – திருவாசகத்தின் முதல் பாடல் வெளியானது  !!

தமிழ் ஆன்மிக இலக்கிய உலகின் உச்ச சாதனைகளில் ஒன்றாகக் கருதப்படும் திருவாசகம், இப்போது சமகால இசை வடிவில் புதிய உயிர் பெற்றுள்ளது. இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஜி.வி. பிரகாஷ் குமார் குரலும் இசையும் இணைந்து உருவான திருவாசகத்தின் முதல் பாடல் தற்போது…

0 Comments

சுந்தர் சி, விஷால், ஹிப்ஹாப் தமிழா கூட்டணியில் புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் –  புருஷன் !

தமிழ் சினிமாவின் வெற்றிகரமான சுந்தர் சி – விஷால் கூட்டணி மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளது. “புருஷன்” என தலைப்பிடப்பட்ட இந்த புதிய கமர்ஷியல் எண்டர்டெயினர் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு, தமிழ் திரையுலகிலும் ரசிகர்களிடையிலும் பெரும் உற்சாகத்தை…

0 Comments

Jockey Tamil Movie Review:

CAST: Yuvan Krishna - Ramar Ridhaan Krishnas -  Karthi Ammu Abhirami - Meenachi Kali - Kali Madhusudhan Rao - Vasthavi Sithan Mohan - Othamuttu Saranya Ravi - Eswari Phathmen -…

0 Comments

“எல்லை கடக்கும் உணர்வுகள்… தமிழ்–கன்னட ஒற்றுமையின் குரல் ‘ரைஸ் ஆஃப் அசோகா”

 கன்னடத்தில் பிரபலமான நடிகர் சதீஷ் நினாசம் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ரைஸ் ஆஃப் அசோகா’. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இப்படத்தை இயக்குநர் வினோத் வி. தோந்த்ளே இயக்கியுள்ளார். விருத்தி கிரியேசன் – சதீஷ்…

0 Comments

*டோவினோ தாமஸ்  பிறந்த நாளில் “பள்ளிச்சட்டம்பி” (Pallichattambi)  ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!*

*டோவினோ தாமஸ் பிறந்தநாள் சிறப்பு போஸ்டரை வெளியிட்ட “பள்ளிச்சட்டம்பி”  படக்குழு !   ஏப்ரல் 9 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது !!* டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில், டோவினோ தாமஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும், பெரிய பட்ஜெட்டில் உருவாகும் “பள்ளிச்சட்டம்பி” திரைப்படத்தின் மோஷன்…

0 Comments

“காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு: ஜனவரியில் திரையரங்குகளை ஆட்கொள்ளப் போகும் மௌனம் !! 

சத்தமாய் பேசும் திரையுலகில் மௌனத்தைத் துணிச்சலுடன் தேர்ந்தெடுத்த Zee Studios “காந்தி டாக்ஸ்” டீசர் வெளியீடு !  அதிரடியான வசனங்களும் சத்தமுள்ள காட்சிகளும் நிரம்பிய இன்றைய திரை உலகில், “காந்தி டாக்ஸ்” படத்தின் டீசர் ஒரு துணிச்சலான மாற்றமாக வந்துள்ளது. ஒரு…

0 Comments

ZEE5-ல் மீண்டும் ஒரு வலுவான கதையுடன் சமுத்திரகனி! “தடயம்” – விரைவில் டிஜிட்டல் வெளியீடு

இந்தியாவின் முன்னணி ஓடிடித் தளமான ZEE5 தமிழின் பிராந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்,  தனது அடுத்த படைப்பான “தடயம்”  படைப்பின் அறிவிப்பை, இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளுக்கும், சமூகப் பார்வை கொண்ட நடிப்புக்கும் பெயர் பெற்ற சமுத்திரகனி,…

0 Comments

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் ‘புரொடக்‌ஷன் நம்பர் 4’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

சாந்தி டாக்கீஸ் அருண் விஸ்வா வழங்கும், இயக்குநர் ஹரிஹரசுதன் அழகிரி இயக்கத்தில் பாரத்- சான்வி மேக்னா நடிக்கும் 'புரொடக்‌ஷன் நம்பர் 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது! உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மகிழ்ந்து, கொண்டாடும்படியான படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறார்…

0 Comments

*அஸ்வின் குமார்-  ப்ரியா பவானி சங்கர் நடித்திருக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு*

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஹாட் ஸ்பாட் 2 மச் ' படத்தில் அஸ்வின் குமார், பிரியா பவானி சங்கர், எம். எஸ்.…

0 Comments

நடிகை பவானி ஸ்ரீ, தேர்ந்தெடுக்கப்பட்ட மற்றும் நடிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென தனித்துவமான இடத்தைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறார். விடுதலை படத்தில் அவர் வெளிப்படுத்திய வலுவான நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றதோடு, ஆழமும் தீவிரமும் கொண்ட கதாபாத்திரங்களில் முழுமையாக ஒன்றி நடிக்கும் அவரது திறமைக்கு விமர்சகர்களும் ரசிகர்களும் ஒருமனதாக பாராட்டியுள்ளனர்.

அவரது பயணத்தில் புதிய மற்றும் உற்சாகமான கட்டமாக, ஹாட்ஸ்பாட் 2 மூலம் light hearted சினிமாவுக்குள் முதல் முறையாக காலடி எடுத்து வைக்கிறார். நவீன காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம், இந்த வாரம் உலகளாவிய திரையரங்க வெளியீட்டுக்கு தயாராக உள்ளது. படத்தின்…

0 Comments

*இரண்டாவது முறையாக பெற்றோராகும் இயக்குநர் அட்லீ – பிரியா தம்பதியர்*

இந்திய திரையுலகில் முன்னணி நட்சத்திர இயக்குநரும், தொடர் வெற்றியை வழங்கி வரும் தனித்துவமான படைப்பாளியான இயக்குநர் அட்லீ மீண்டும் சந்தோஷத்தின் உச்சத்திற்கு சென்றுள்ளார்.  இயக்குநர் - தயாரிப்பாளர் அட்லீ - திருமதி பிரியா அட்லீ இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார் எனும் மகிழ்ச்சியான…

0 Comments

சசிகுமார் நடிக்கும் ‘ மை லார்ட்’ படத்தின் டிரெய்லர்  வெளியீடு

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ' மை லார்ட்' எனும் திரைப்படத்தின் டிரெய்லர்  வெளியிடப்பட்டிருக்கிறது. முன்னணி இயக்குநரான ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'மை லார்ட் ' எனும் திரைப்படத்தில்…

0 Comments

பொங்கல் கொண்டாட்டத்துடன் படப்பிடிப்பை நிறைவு செய்த ‘அறுவடை’  படக்குழு!

'லாரா' திரைப்படத்தைத் தொடர்ந்து எம். கே .ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தயாரிக்கும் இரண்டாவது படைப்பு 'அறுவடை'  திரைப்படம். இயக்குநர் எம். கார்த்திகேசன் இயக்கத்தில் உருவாகும் இந்த 'அறுவடை' திரைப்படத்தில் கதையின் நாயகனாக எம்.கார்த்திகேசன் நடிக்க, அவருடன் கதாநாயகியாக…

0 Comments